உன்னதரே நீர் மகிமை


Glorin in Excelsis Do
Frankfort

4                                                         8, 8, 7, 8, 8, 7, 4, 12, 8

            உன்னதரே நீர் மகிமை,
            இந்நிலம் சமாதானத்தை
                        அடைய அன்பு ஓங்க!
            பராபரனார் கர்த்தாவே,
            பரம ராஜா பர்த்தாவே,
            வல்லமை தந்தாய், வாழ்க!
                        தாழ்ந்து வீழ்ந்து,
            போற்றுவோமே புகழ்வோமே
                        தொழுவோமே;
            மாட்சி மேன்மைக்கென்றும் ஸ்தோத்ரம்.

2.         பிதாவின் ஒரே மைந்தனே,
            சுதாவே கர்த்தா ராஜரே,
                        தெய்வாட்டுக்குட்டி நீரே;
            பார் மாந்தர் பாவம் போக்கிடும்
            மா தந்தை பக்கல் ஆண்டிடும்
                        மகத்துவ கிறிஸ்து நீரே;
                        கேட்பீர் ஏற்பீர்
            ஏழை நீசர் எங்கள் ஜேபம்
                        தாழ்வாம் வேண்டல்
            இரங்குவீர் தயவோடே.

3.         நீர் தூயர் தூயர் தூயரே,
            நீர் கத்தர் கர்த்தர் கர்த்தரே,
                        என்றென்றும் ஆள்வீர் நீரே;
            பிதாவின் ஆசனத்திலே
            மேதையாய் வீற்றுப் பாங்கினில்
                        கர்த்தாவாம் ஆவியோடே,
                        இன்றும் என்றும்
            ஏக மாண்பு ஏக மாட்சி
                        ஏக மேன்மை
            தாங்கி ஆள்வீர் தேவரீரே.

https://www.youtube.com/watch?v=rnpJRMmpPf0

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு