15 September 2018

அருளின் ஒளியைக் கண்டார்

பாமாலை:55

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

The People that in darkness

Dundee Sat

 

55                                                                                            C.M.

 

1.         அருளின் ஒளியைக் கண்டார்

                        இருளின் மாந்தரே;

            மருள் மரண மாந்தரில்

                        திரு ஒளி வீச.

 

2.         ஜாதிகளைத் திரளாக்கி

                        நீதி மகிழ்ச்சியால்

            கோதில் அறுப்பில் மகிழ

                        ஜோதியாய்த் தோன்றினார்.

 

3.         கர்த்தன், பிறந்த பாலகன்,

                        கர்த்தத்துவமுள்ளோன்;

            சுத்த அவரின் நாமமே

                        மெத்த அதிசயம்.

 

4.         ஆலோசனையின் கர்த்தனே,

                        சாலவே வல்லோனே,

            பூலோக சமாதானமே,

                        மேலோகத் தந்தையே.

 

5.         தாவீதின் சிங்காசனத்தை

                        மேவி நிலைகொள்ள

            கூவி நியாயம் நீதியால்

                        ஏவி பலம் செய்வார்.

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...