அருள் மாரி எங்குமாக
Lord I hear of
showers of blessing
Etiam Et Mihi. SS 485
295 8,
7, 8, 7 with refrain
1. அருள் மாரி எங்குமாக
பெய்ய,
அடியேனையும்
கர்த்தரே,
நீர் நேசமாக
சந்தித்தாசீர்வதியும்;
என்னையும்,
என்னையும்
சந்தித்தாசீர்வதியும்.
2. என்
பிதாவே, பாவியேனை
கைவிடாமல் நோக்குமேன்;
திக்கில்லா
இவ்வேழையேனை
நீர்
அணைத்துக் காருமேன்;
என்னையும்,
என்னையும்
நீர்
அணைத்துக் காருமேன்.
3. இயேசுவே,
நீர் கைவிடாமல்
என்னைச்
சேர்த்து ரட்சியும்;
ரத்தத்தாலே
மாசில்லாமல்
சுத்தமாக்கியருளும்;
என்னையும்,
என்னையும்
சுத்தமாக்கியருளும்.
4. தூய
ஆவி கைவிடாமல்
என்னை
ஆட்கொண்டருளும்;
பாதை
காட்டிக் கேடில்லாமல்
என்றும்
காத்துத் தேற்றிடும்;
என்னையும்,
என்னையும்
என்றும்
காத்துத் தேற்றிடும்.
5. மாறா
சுத்த தெய்வ அன்பும்,
மீட்பர்
தூய ரத்தமும்,
தெய்வ
ஆவி சக்திதானும்
மாண்பாய்த்
தோன்றச் செய்திடும்;
என்னிலும்,
என்னிலும்
மாண்பாய்த்
தோன்றச் செய்திடும்.
இது ஒரு அருமையான இறை வேண்டல் ஆகும். நன்றி.
ReplyDeleteநன்றி!
Delete