15 September 2018

சபையே ஏக சித்தத்தை


7. Ely; Eman.                                                              (362)   L.M.

"Worship the Lord"

1.       சபையே, ஏக சித்தத்தை
            அடைந்து பூரிப்பாகுங்கள்;
            வணக்கமாகக் கர்த்ரை
            எல்லாரும் வாழ்த்தல் செய்யுங்கள்.

2.         யெகோவாவே மெய்த்தேவனார்
            எல்லாரையும் படைத்தனர்;
            அவர் கொடுத்த - மைந்தனார்
            எல்லார்க்கும் மீட்புண்டாக்கினார்.

3.         மேலான இந்த நன்மையை
            நினைத்து இவ்விடத்திலே
            சந்தோஷப்பட்டு, நாயனை
            புகழ்ந்த போற்றல் ஞாயமே.

4.         தேவாவியே, இரக்கமாய்
            வந்தடியாரைச் சந்தியும்;
            இங்குள்ள யாரும் உண்மையாய்
            ஆராதிக்க நீர் போதியும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...