தூய தூய தூயரே த்ரியேக தேவா

6. Nicoea.                                      11, 12, 12, 10 Irregular

"Holy, holy, holy, Lord God Almighty!"

1.       தூய, தூய, தூயரே! த்ரியேக தேவா,
            உமக்கே எந்நாளும் சங்கீதம் ஏறுமே;
            தூய, தூய, தூயரே! சர்வவல்ல நாதா!
            காருண்யரே, ஆனந்தக் கடலே!

2.         தூய, தூய, தூயரே! அன்பர் சூழ நின்று
            தேவ ஆசன முன்னர்தம் க்ரீடம் வைப்பரே;
            கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று,
            இன்றென்றும் வீற்றாள்வீர்; அநாதியே!

3.         தூய, தூய, தூயரே! ஜோதிப்ரகாசா,
            பாவக்கண்ணால் உம்தன் மாண்பைக் காண யார்வல்லோர்?
            நீரேபரி சுத்தர்; மனோவாக்குக் கெட்டா
            மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்.

4.         தூய, தூய, தூயரே! த்ரியேக தேவா,
            வானம், பூமி, ஆழி உம்மை துதி செய்யுமே;
            தூய, தூய, தூயரே! சர்வ வல்ல நாதா!
            காருண்யரே, தூய த்ரியேகரே! 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு