நாம் தேவ சந்நிதானத்தில்
8. Luther, 8, 7, 8, 7,
8, 8, 7
"Sei
Lob und Ehr dem hochsten Gut"
1. நாம் தேவ
சந்நிதானத்தில்
மகா மகிழ்ச்சியாக
வந்தாதி கர்த்தரண்டையில்
வணக்கஞ் செய்வோமாக,
யெகோவாவுக்கு நிகர் ஆர்!
யாவும் நன்றாகச் செய்கிறார்;
கர்த்தாவுக்கே புகழ்ச்சி!
2. கர்த்தாதி கர்த்தர் ஞானத்தால்
யாவற்றையும் நன்றாக
சிஷ்டித்துத் திட்டம் செய்ததால்,
மகா வணக்கமாக
விண் மண் கடல் ஆகாசமும்
விடாமல் துதி செலுத்தும்;
கர்த்தாவுக்கே புகழ்ச்சி!
3. மேலான அற்புதங்களை
செய்தென்னைப் பூரிப்பாக்கி,
என் மேல் விழுந்த பாரத்தை
இரக்கமாய் விலக்கி
ரட்சித்த மா தயாபரர்
துதிக்கு என்றும் பாத்திரர்;
காத்தாவுக்கே புகழ்ச்சி!
4. மெய் மார்க்கத்தாரே, கர்த்தரை
துதித்துக் கொண்டிருங்கள்;
அவர் சிறந்த நாமத்தை
எந்நேரமும் தொழுங்கள்
அவர் எல்லாம் படைத்தவர்,
கர்த்தாதி கர்த்தரானவர்;
கர்த்தாவுக்கே புகழ்ச்சி!
Comments
Post a Comment