பராபரனே உமது
33. Eisenach Rivaulx;
Winchester. L.M.
"Ver
deinen thron tret ich hiemit"
1. பராபரனே,
உமது
ராஜாசனத்தின் அண்டைக்கு
பணிந்து தாழ்மையாய் வரும்
இப்பாவியைத் தள்ளாதேயும்.
2. பிதாவே, என்னைத் தேவரீர்
உம் சாயலாய்ச் சிருஷ்டித்தீர்;
நீர்தான் என் ஜீவன் உம்மையே
அல்லாமல் மாண்டு போவேனே.
3. தெய்வீக மைந்தன் இயேசுவே,
வற்றாத அன்பின் ஆழியே,
அடியேன் உய்ய, தேவரீர்,
பலியாய் ஜீவனை விட்டீர்.
4. தேவாவியே என் நெஞ்சை நீர்
திருப்பிப் புதிதாக்கினீர்;
என்னென்ன நன்மை என்னிலே
உண்டோ, அதும்மால் வந்ததே.
5. நீர் சோதனையில் தாங்குவீர்,
எத்துன்பத்திலும் கைவிடீர்;
உம்மால் திடனும் வெற்றியும்
மனமகிழ்ச்சியும் வரும்.
Comments
Post a Comment