பிதாவே உம்தன் உன்னத


34. Dengen; Luther.                             (126)   8, 7, 8, 7, 8, 8, 7

"Allein Go in der Hoh sei Ehr"

1.       பிதாவே, உம்தன் உன்னத
                        பேரன்புக்காய் புகழ்ச்சி
            என் பாவக்கேட்டை நீக்கின
                        அருள் மகா திரட்சி;
            பூமியில் சமாதானமும்
            நரர்களுக்கு நன்மையும்
                        உண்டாகும்படி செய்தீர்.

2.         ஆ யேசு தேவ மைந்தனே
                        மாபலியைச் செலுத்தி
            கெட்டோரை மீட்ட மீட்பரே
                        மாசற்ற ஆட்டுக்குட்டி,
            மா கர்த்தரே, தயாபரா,
            அடியார் ஜெபம் கேட்டெல்லா
                        நரர்க்கும் நீர் இரங்கும்.

3.         மெய்யாகத் தேற்றும் உன்னத
                        நல்லாவியே, இறங்கும்;
            பூமியில் கிறிஸ்து சகித்த
                        மிகுந்த கஸ்தியாலும்
            மீட்டோரைச் சாத்தான் கண்ணியில்
            விழாமல் காத்து, துன்பத்தில்
                        மெய்யாறுதலைத் தாரும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு