வானமும் பூமியும்

32. Flat Lux: Moscow.                                 6, 6, 4, 6, 6, 6, 4.

"Thou, Whose almighty word"

1.       வானமும் பூமியும்
          சமஸ்த அண்டமும்
                        படைத்த நீர்
            வேதத்தின் ஒளியை
            பரப்பி, இருளை
            அகற்றி; செங்கோலை
                        செலுத்துவீர்.

2.         மீட்பை உண்டாக்கவும்
            மாந்தரைக் காக்கவும்
                        பிறந்த நீர்
            பாவத்தை அழித்து,
            சாத்தானை மிதித்து,
            யாரையும் ரட்சித்து
                        நடத்துவீர்.

3.         பாவியின் நெஞ்சத்தை
            திருப்பி ஜீவனை
                        கொடுக்கும் நீர்
            சபையை முழுதும்
            திருத்தித் தேற்றவும்
            ஏகமாய்ச் சேர்க்கவும்
                        அருளுவீர்.

4.         ஞானம் நிறைந்தவர்
            அன்பு மிகுந்தவர்
                        த்ரியேகரே.
            ராஜ்ஜியம், வல்லமை,
            நித்திய மகிமை,
            உமக்கே உரிமை,
                        ஆண்டவரே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே