12 September 2018

மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின்


பல்லவி

                   மகிழுவேன் மகிழுவேன்
                        இரட்சிப்பின் தேவனின் மகிழுவேன்

சரணங்கள்

1.         அத்தி மரம் துளிர் விடாமற் போயினும்
            திராட்சைச் செடி பழம் கொடாமற் போயினும்    - மகிழுவேன்

2.         ஒலிவ மரம் காய்க்காமற் போயினும்
            வயலில் விளைச்சல் இல்லாமற் போயினும்         - மகிழுவேன்

3.         கிடையில் ஆடு முதலற்றாலும்
            தொழுவத்தில் மாடு இல்லாமற் போயினும்         - மகிழுவேன்

4.         என் கால்களை அவர் மான் கால் போலாக்கி
            உன்னத ஸ்தலங்களில் நடத்துகிறார்               - மகிழுவேன்

5.         என் கோட்டை என் பெலன் என் யெகோவா
            உமக்குள் நித்தியம் மகிழுவேன்                       - மகிழுவேன்  

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...