12 September 2018

நான் உம்மைப் பற்றி ரட்சகா


நூற்றாண்டு கீதங்கள் 319
கீதங்களும் கீர்த்தனைகளும் 128
கன்வென்சன் 289

1.       நான் உம்மைப் பற்றி ரட்சகா
            வீண் வெட்கம் அடையேன்
            பேரன்பைக் குறித்தாண்டவா
            நான் சாட்சி கூறுவேன்.

பல்லவி

                        சிலுவையண்டையில்
                        நம்பி வந்து நிற்கையில்
                        பாவப் பாரம் நீங்கி, வாழ்வடைந்தேன்
                        எந்த நேரமும் என துள்ளத்திலும்
                        பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்.

2.         ஆ! உந்தன் வல்ல நாமத்தை
            நான் நம்பிச் சார்வதால்
            நீர் கைவிடீர் இவ்வேழையைக்
            காப்பீர் தேவாவியால்

3.         மா வல்ல வாக்கின் உண்மையைக்
            கண்டுணரச் செய்தீர்
            நான் ஒப்புவித்த பொருளை
            விடாமல் காக்கிறீர்

4.         நீர் மாட்சியோடு வருவீர்
            அப்போது களிப்பேன்
            ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
            மெய் பாக்கியம் அடைவேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...