18 September 2018

ஆ நீதியுள்ள கர்த்தரே

பாமாலை:231

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

Ach Herre du gerechter Gott

Luther

 

231                                                                 8, 7, 8, 7, 8, 8, 7

 

1.         ஆ, நீதியுள்ள கர்த்தரே,

                        வயல் வறண்டதாலே

            எச்ஜீவனும் வதங்கிற்றே;

                        இக்கேடு எங்களாலே

            நடந்த பாவத்தின் பலன்,

                        என்றெங்களில் ஒவ்வொருத்தன்

            துக்கித்துச் செல்வானாக.

 

2.         ஆ, எங்கள் மீறுதல்களை

                        இரக்கமாய் மன்னியும்;

            நீரே அடியார் நம்பிக்கை,

                        சகாயத்தை அளியும்;

            கர்த்தாவே, சுத்த தயவால்

                        மழையைத் தந்து, அதினால்

            நிலத்தைப் பூரிப்பாக்கும்.

 

3.         தயாபரா, நீர் உமது

                        நல் வாக்கு நிறைவேற,

            காய்ந்து கிடக்கும் பூமிக்குத்

                        தண்ணீர் இறைப்பீராக;

            வானுலகாளும் கர்த்தரே,

                        மழையை உம்மை அன்றியே

            ஆர் பெய்யப் பண்ணக்கூடும்?

 

4.         மூச்சற்ற விக்ரகங்களால்

                        கூடாது; தேவரீரே

            வானத்தைத் திருக் கரத்தால்

                        விரித்தீர்; அதில் நீரே

            அளவில்லாமல் ஆள்பவர்,

                        நீரே பிதா, நீர் ரட்சகர்,

            உம்மாலே யாவும் ஆகும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...