18 September 2018

ஆ பாக்கிய தெய்வ பக்தரே

பாமாலை:164

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

The saints of God their confict past

Rest

 

164                                                                 8, 8, 8, 8, 8, 8

 


1.       ஆ பாக்கிய தெய்வ பக்தரே!

            உம் நீண்ட போர் முடிந்ததே!

            வெற்றி கொண்டே, சர்வாயுதம்

            வைத்து விட்டீர் கர்த்தாவிடம்!           

            சீர் பக்தரே, அமர்ந்து நீர்

            இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.

 


2.         ஆ பாக்கிய தெய்வ பக்தரே!

            மா அலுப்பாம் பிரயாணத்தை

            முடித்து, இனி அலைவும்

            சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்

            சீர் பக்தரே, அமர்ந்து நீர்

            நல் வீட்டில் இளைப்பாறுவீர்.

 

3.         ஆ பாக்கிய தெய்வ பக்தரே!

            இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;

            இப்போதபாயப் புயலும்

            உம்மைச் சேராது கிஞ்சித்தும்

            சீர் பக்தரே, அமர்ந்து நீர்

            இன்பத் துறையில் தங்குவீர்.

 


4.         ஆ பாக்கிய தெய்வ பக்தரே!

            உம் மேனி மண்ணில் தூங்கவே,

            மாண்பாய் எழும்புமளவும்

            விழித்துக் காத்துக்கொண்டிரும்;

            சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்

            நம் ராஜா வருவார் என்பீர்.

 

5.         கேளும் தூயோரின் நாதரே

            பரிந்து பேசும் மீட்பரே,

            வாழ் நாள் எல்லாம் நல்லாவியே,

            கடாட்சம் வைத்து ஆளுமே;

            சீர் பக்தரோடு நாங்களும்

            மேலோகில் சேரச் செய்திடும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...