18 September 2018

ஆ இயேசுவே நீர்

பாமாலை:330

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

O Jesus my hope

MH 200

 

330                                                                 5, 5, 12 D.

 

1.                 ஆ இயேசுவே, நீர்

                        என் பலியானீர்;

            பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;

                        மன்றாடிடுவீர்

            இப்பாவிக்காய் நீர்;

            "என்னைக் கொன்றோருக்காய்

                        உயிர் ஈந்தேன்" என்பீர்.

 

2.                     இறங்கிடுமேன்,

                        அகற்றிடுமேன்

            உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;

                        சிலுவை அன்பால்

                        என்னை இழுத்தால்

            ஆவேன் விடுதலை பாவியாம்

                        அடிமை.

 

3.                     கோபம் பெருமை

                        போக்கும் சிலுவை;

            அகற்றுமே தூய ரத்தமும்

                                    தோஷத்தை;

                        தீய மனத்தை

                        பாவ பாரத்தை

            அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும்

                        உம்மண்டை.

 

4.                     தூய வெண்மையே

                        இப்போ இப்போதே;

            உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே;

                        தூயோன் ஆக்குவீர்

                        முற்றும் மாற்றுவீர்;

            உந்தன் சாயல் என் வாழ்க்கையில்

                        உண்டாக்குமே.

 

5.                     உம் ரத்தம் என்னில்

                        நிலைத்திருப்பின்,

            ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்

                        பிதாவின் முன்னர்

                        சகாயராம் நீர்,

            சுதா, பாவியேனை உம் அன்பால்

                        வாழ்விப்பீர்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...