19 September 2018

ஆண்டவா மேலோகில் உம்

பாமாலை:220

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

Pleasant are Thy courts above

Maidstone

 

220                                                                 7, 7, 7, 7 D.

 

1.       ஆண்டவா! மேலோகில் உம்

            அன்பின் ஜோதி ஸ்தலமும்,

            பூவில் ஆலயமுமே

            பக்தர்க்கு மா இன்பமே.

            தாசர் சபை சேர்ந்திட,

            நிறைவாம் அருள் பெற,

            ஜோதி காட்சி காணவும்,

            ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்.   

 

2.         பட்சிகள் உம் பீடமே

            சுற்றித் தங்கிப் பாடுமே;

            பாடுவாரே பக்தரும்

            திவ்விய மார்பில் தங்கியும்;

            புறாதான் பேழை நீங்கியே

            மீண்டும் வந்தாற்போலவே,

            ஆற்றில் காணா நின் பக்தர்

            ஆறிப்பாதம் தரிப்பர்.

 

3.         அழுகையின் பள்ளத்தில்

            ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்;

            ஜீவ ஊற்றுப் பொங்கிடும்,

            மன்னா நித்தம் பெய்திடும்;

            பலம் நித்தம் ஓங்கியே

            உந்தன் பாதம் சேரவே,

            துதிப்பார் சாஷ்டாங்கமாய்

            ஜீவ கால அன்புக்காய்.

 

4.         பெற மோட்ச பாக்கியம்

            பூவில் வேண்டும் சமூகம்;

            ரட்சை செய்யும் தயவால்

            பாதம் சேர்த்தருள்வதால்,

            நீரே சூரியன் கேடகம்,

            வழித்துணை காவலும்;

            கிருபை மகிமையும்

            மேலும் மேலும் பொழியும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...