ஆத்துமாக்கள் மேய்ப்பரே


Bishop of the souls of men
Sherborne

148                                                                     7, 7, 7, 7, 7, 7

          ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
            மந்தையைப் பட்சிக்கவும்
            சாத்தான் பாயும் ஓநாய் போல்
            கிட்டிச் சேரும் நேரமும்
            நாச மோசம் இன்றியே
            காரும், நல்ல மேய்ப்பரே.

2.         பணம் ஒன்றே ஆசிக்கும்
            கூலியாளோ ஓடுவான்;
            காவல் இன்றிக் கிடக்கும்
            தொழுவத்தின் வாசல்தான்;
            வாசல், காவல் ஆன நீர்
            மந்தை முன் நின்றருள்வீர்.

3.         கெட்டுப் போன யூதாஸின்
            ஸ்தானத்திற்குத் தேவரீர்,
            சீஷர் சீட்டுப்போடவே
            மத்தியா நியமித்தீர்;
            எங்கள் ஐயம் யாவிலும்,
            கர்த்தரே நடத்திடும்.

4.         புது சீயோன் நகரில்
            பக்தர் வரிசையிலே
            நிற்கும் மத்தியாவோடும்
            நாங்கள் சேரச் செய்யுமே
            கண் குளிர உம்மையும்
            காணும் பாக்கியம் அருளும்.    

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே