19 September 2018

ஆத்துமாவே உன்னை ஜோடி

பாமாலை:186

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

Schmucke dich o liebe Seele

St. Raphael

 

186                                                                 8, 7, 8, 7, 4, 7.

 

1.       ஆத்துமாவே, உன்னை ஜோடி;

                        தோஷம் யாவையும் விடு;

            மீட்பரண்டை சேர ஓடி

                        நன்றாய் ஜாக்கிரதைப்படு;

                                    கர்த்தர் உன்னை

            பந்திக்கு அழைக்கிறார்.

 

2.         இந்தப் போஜனத்தின் மேலே

                        வாஞ்சையாய் இருக்கிறேன்;

            உம்மையே இம்மானுவேலே,

                        பக்தியாய் உட்கொள்ளுவேன்,

                                    தேவரீரே

            ஜீவ அப்பமானவர்.

 

3.         மாசில்லாத ரத்தத்தாலே

                        என்னை அன்பாய் ரட்சித்தீர்;

            அதை நீர் இரக்கத்தாலே

                        எனக்கென்றும் ஈகிறீர்;

                                    இந்தப் பானம்

            என்னை நித்தம் காக்கவே.

 

4.         உம்முடைய சாவின் லாபம்

                        மாட்சிமை மிகுந்தது;

            என்னிடத்திலுள்ள சாபம்

                        உம்மால்தானே நீங்கிற்று,

                                    அப்பமாக

            உம்மை நான் அருந்தவே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...