மெய் ஜோதியாம் என் நேசரே

17. Abends Hurseley                                                            L.M.

"Sun of my soul, Thou Saviour dear"

1.       மெய் ஜோதியாம் என் நேசரே,
            நீர் தங்கினால் ராவில்லையே;
            என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்
            மேகம் வராமல் காத்திடும்.

2.         உம் நேசமார்பில் என்றுமே
            நான் சாய்வது வாழ்தல் இன்பமே,
            என்றெந் தன் படுக்கையிலும்
            சிந்திக்க ஏவியருளும்.

3.         என்னோடு தங்கும் பகலில்
            சுகியேன் நீர் இராவிடில்;
            என்னோடு தங்கும் ராவிலும்,
            நீர் தாங்கின் அஞ்சேன் சாவிலும்.

4.         இன்றைக்குத் திவ்ய அழைப்பை
            அசட்டை செய்த பாவியை
            நீர் கைவிடாமல், இப்போதே
            இழுத்துக் கொள்ளும், மீட்பரே.

5.         நோயுற்றோரைக் கண்ணோக்கிடும்.
            வறியோரை விசாரியும்;
            துக்கிப்போர் சிசுபோலவே
            அமர்ந்து தூங்கச் செய்யுமே.

6.         விழிக்கும் போதென்னருகில்
            நீர் வந்து எந்தன் வேலையில்
            என் ஆயுள் காலம் முழுதும்
            உம் அருள் தந்து காத்திடும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு