இப்போது தூங்கும்படி நான்
18. Evan (364)
"Nun
sich der Tag geendet hat"
1. இப்போது தூங்கும்படி
நான்
என் கண்ணை மூடுவேன்;
என் காவலாளர் கர்த்தர்தான்,
கலக்கமாய் இரேன்.
2. அகன்று போங்கள் தூரமாய்,
துர் யோசனைகளே;
கர்த்தாவுக் கென்னைப் பிள்ளையாய்
நான் ஒப்புவித்தேனே.
3. என் ஜீவன் இந்த ராவினில்
சென்றாலும், கர்த்தரே
என் ஆவியை உம்மண்டையில்
நீர் சேர்த்துக் கொள்வீரே
4. பிழைத்தும், செத்தும், மீட்பரே,
நான் உம்முடையவன்;
ஆகையால், பயம் இல்லையே,
நீர் என் பராபரன்
Comments
Post a Comment