17 September 2018

கர்த்தாவே என்னை மா அன்பாய்


19. Holy Trinity; Wiltshire   C.M.

            "Nun sich der Tag geendet hat"

1.       கர்த்தாவே என்னை மா அன்பாய்
                        நீர் இந்த ராவிலும்
            பொல்லாங்கில்லாமல் சுகமாய்
                        தற்காத்துக் கொண்டிரும்.

2.         இருட்டிலேயும் தேவரீர்
                        வெளிச்சமானவர்;
            மெய் இஸ்ரவேலைக் காக்கும் நீர்
                        உறக்கமற்றவர்.

3.         என்னால் உண்டான பாவத்தால்
                        மனம் கலங்கினும்,
            க்றிஸ்துவின் தூய ரத்தத்தால்
                        என் நெஞ்சைக் கழுவும்.

4.         இரக்கம் செய்த உமக்கே
                        புகழும் நன்றியும்
            செலுத்துவேன், என் கர்த்தரே;
                        என்னைத் தள்ளாதிரும்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...