இந்நாள் வரைக்கும் தேவனே


20. Tallis Canon, Breslau.                               (365)               L.M.

"All praise to Thee, my God.."

1.         இந்நாள் வரைக்கும் தேவனே,
            என்னைத் தற்காத்து வந்தீரே;
            உமக்குத் துதி ஸ்தோத்திரம்
            செய்கின்றதே என் ஆத்துமம்.

2.         ராஜாக்களுக்கு ராஜனே
            உமது செட்டைகளிலே,
            என்னை அணைத்துச் சேர்த்திடும்,
            இரக்கமாகக் காத்திடும்.

3.         விரோதம் நெஞ்சில் பேணாது
            நான் தூங்க அருள் புரிந்து
            க்றிஸ்து நிமித்தம் இரங்கும்;
            என் குற்றம் யாவும் மன்னியும்.

4.         பிதாவே, என்றும் எனது
            அடைக்கலம் நீர்; உமது
            முகத்தைக் காணும் காட்சியே
            நித்தியானந்த முத்தியே.

5.         அருளின் ஊற்றாம் தேவனை,
            பிதா குமாரன் ஆவியை
            துதியும், வான சேனையே
            துதியும் மாந்தர் கூட்டமே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே