18 September 2018

உன்னதமான கர்த்தரே


28. Mainzer: Mozart                                                    L.M.

"Heut ist des Herren Ruhetag"

1.         உன்னதமான கர்த்தரே,
            இவ்வோய்வு நாளைத் தந்தீரே;
            இதற்காய் உம்மை போற்றுவோம்
            சந்தோஷமாய் ஆராதிப்போம்.

2.         விஸ்தாரமான லோகத்தை
            படைத்த சுவாம, எங்களை
            இந்நாள் வரைக்கும் தேவரீர்
            அன்பாய் விசாரித்து வந்தீர்.

3.         எல்லாரும் உமதாளுகை,
            பேரன்பு, ஞானம் வல்லமை
            மற்றெந்த மாட்சிமையையும்
            அறிந்து உணரச் செய்யும்.

4.         உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே
            நீர் எங்கள் ஆத்துமாவிலே
            தரித்து, எந்த நன்மைக்கும்
            நீர் எங்களை உயிர்ப்பியும்.

5.         தேவாவியே, நல் அறிவும்
            மெய் நம்பிக்கையும் நேசமும்
            சபையிலே மென்மேலுமே
            வளர்ந்துவரச் செய்யுமே.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...