கர்த்தாவின் ஓய்வுநாள் இதாம்


27. Church triumphant:                                            (367)   L.M.

"Heut ist des Herren Ruhetag"

1.         கர்த்தாவின் ஓய்வுநாள் இதாம்,
            விசாரம் வேலையை எல்லாம்
            ஒழித்து தேவ தயவை
            சந்தோஷமாகவே நினை.

2.         கர்த்தர் படைத்தவை எல்லாம்
            அவர்க்கு மா புகழ்ச்சியாம்;
            இருள் இருந்த பொழுதே
            வெளிச்சம் தோன்றச் செய்தாரே.

3.         விசேஷமாகப் பாவத்தை
            நிவிர்த்தி செய்த அருளை
            மகிழ்ந்து பாடிப் போற்றுவோம்,
            என்றைக்கும் உம்மை வாழ்த்துவோம்.

4.         கெம்பீரமாய் எழுந்த பின்
            இந்நாளில் அவர் சீஷரின்
            துக்கிப்பை நீக்கி திக்கற்றார்
            இருதயத்தைத் தேற்றினார்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே