15 September 2018

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

பாமாலை:122

To Download Txt Lyrics file

 

Alleluya! O sons and daughters

O Filii Et Filiae

 

122                                                     8, 8, 8 with Alleluyas

 

1.         அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!

          ஆ மாந்தரே, நாம் பாடுவோம்

            இந்நாளில் சாவை வென்றோராம்

            விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்

                        அல்லேலூயா!

 

2.         அஞ்ஞாயிறு அதிகாலை

            நல் மாதர் மூவர் கல்லறை

            சென்றாரே காண தேகத்தை

 

3.         அம்மூவர் பார்த்தார் தூதன்தான்;

            வெண் ஆடை தூதன் சொல்லுவான்;

            'நாதர் கலிலேயா செல்வார்'!

 

4.         பயந்த சீஷர் ராவிலே

            கண்டார் கேட்டார் தம் நாதரே!

            'என் சமாதானம், தாசரே!'

 

5.         'உயிர்த்த நாதர் கண்டோமே'

            என்றோரைத் தோமா கேட்டானே

            நம்பான், சந்தேகங் கொண்டானே;

 

6.         'வா, தோமா, என் விலாவைப் பார்

            இதோ, என் கைகள் கால்கள் பார்,

            நம்பு, சந்தேகம் தீர்' என்பார்.

 

7.         தோமா சந்தேகம் தீர்ந்தனன்,

            விலா, கை, கால்கள் நோக்கினன்,

            என் நாதா! ஸ்வாமி! என்றனன்.

 

8.         காணாமல் நம்பின பாக்கியர்;

            மாறா விஸ்வாசம் வைப்பவர்,

            மா நித்திய ஜீவன் பெறுவர்.

 

9.         மா தூயதாம் இந்நாளில் நாம்

            நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்;

            பரனைப் போற்றி மகிழ்வோம்

                        அல்லேலூயா!

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...