இக்கட்டை மா அன்பாக
15. Aurelia 7,
6, 7, 6, 7, 6, 7, 6
"Aus
meines Herzens Grunde"
1. இக்கட்டை
மா அன்பாக
நீர் போன ராவிலே
விலக்கினதற்காக
துதிப்பேன், கர்த்தரே,
ஆ! இந்த நாள் வரைக்கும்
நான் செய்த தீமைக்கும்
எல்லாப் பிழைகளுக்கும்
மன்னிப்பை அருளும்.
2. தேவாவியால் மெய்யாக
ரட்சிப்பின் நம்பிக்கை
என் ஆவிக்கே உண்டாக,
நீர் தேவ நேசத்தை
அடியேன் நெஞ்சில் ஊற்றி,
பிறரை நேசிக்கும்
நேசத்தை அதில் மூட்டி
மென்மேலும் வளர்த்தும்.
3. மகா பொல்லாங்கனான
பிசாசு தனது
விஷமும் கேடுமான
வினையால் எனக்கு
பொல்லாங்கு ஒன்றும் இன்று
செய்ய விடாதிரும்;
நான் ஜெயங் கொள்வதற்கு
சகாயம் செய்திடும்.
4. சர்வத்துக்கும் மா வல்ல
கர்த்தாதி கர்த்தரே,
குறைவில்லாத நல்ல
விசாரிப்புடனே
உம் சித்தம் நிறைவேற
நீர் என்னை நடத்தும்,
அப்போதெல்லாம் நன்றாக
எனக்கு முடியும்.
Comments
Post a Comment