கர்த்தாவே, போன ராவிலே

14. Tallis Ordinal                                                                 L.M.

"Ich dank dir scben durch deinen..."

1.       கர்த்தாவே, போன ராவிலே
                        இரக்கம் காண்பித்து
            தற்காத்ததாலே உம்மையே
                        துதித்தல் ஏற்றது.

2.         இருளில் என்னை நீர் அன்பால்
                        எவ்விக்கினத்துக்கும்
            விலக்கிக் காத்திராவிட்டால்,
                        பொல்லாங்கு நேரிடும்.

3.         நான் அதற்காக ஸ்தோத்திரம்
                        செலுத்தி நிற்கிறேன்;
            என்னில் நீர் கண்ட தப்பிதம்
                        மன்னிக்கக் கேட்கிறேன்.

4.         எந்நாளும் என்னைச் சத்துரு
                        கெடுக்கப் பார்க்குமே,
            அநேகமான கண்ணிக்கு
                        நேராய் நடத்துமே.

5.         த்ரியேகரே, இரக்கமாய்
                        என்னை நீர் ரட்சியும்;
            விழித்திருக்க மா அன்பாய்
                        பலத்தைத் தந்திடும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே