நீங்காதிரும் என் நேச கர்த்தரே

21. Eventide.                                                             10, 10, 10, 10

"Abide with me; fast falls the eventide"

1.         நீங்காதிரும் என் நேச கர்த்தரே,
            வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
            மற்றோர் ஒத்தாசை அற்றுப்போயினும்
            நீர், மெயச் சகாயரே, நீங்காதிரும்

2.         நீர்மேலே குமிழ்போல் என் ஆயுசும்
            இம்மையில் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
            கண் கண்ட யாவும் மாறிப் போயினும்,
            மாறாத கர்த்தரே, நீங்காதிரும்.

3.         நீர் கூடநின்று தாங்கிவாருமேன்,
            அப்போது தீமைக்கு நான் தப்புவேன்;
            நீர் என் துணை என் பாதை காட்டியும்;
            என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும்.

4.         நான் அஞ்சிடேன் நீர் கூடத் தங்கினால்;
            என் க்லேசம் மாறும் உம் ப்ரசன்னத்தால்;
            சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
            என்றார வாரிப்பேன், நீங்காதிரும்.

5.         நான் சாகும் அந்தகார நேரமே
            நீர் ஒளியாய் விண் காட்சி காட்டுமே;
            பேரின்பஜோதி வீசச் செய்திடும்;
            வாணாள் சாங்காலிலும் நீங்காதிரும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு