மெய்ப் பொழுதான கிறிஸ்துவே

22. Hursley                                                                            L.M.

"Christ, der du bist Tag und Licht"

1.         மெய்ப் பொழுதான கிறிஸ்துவே,
            நீர் அஸ்தமிப்பதில்லையே;
            ஆ! எங்களுக் கெந்நேரமும்
            வெளிச்சம் காண்பித்தருளும்.

2.         பொல்லாத விக்கினங்களை
            விலக்கிப் போட்டடியாரை
            நீர் இந்த ராத்திரியிலே
            அன்பாய்க் காப்பாற்றும், கர்த்தரே.

3.         ஆகாத பாவத் தூக்கமும்
            பிசாசின் சர்ப்பனைகளும்
            விலகப்பண்ணி, நெஞ்சிலே
            சுத்தாங்கம் தாரும் இயேசுவே.

4.         நோவால் தவிப்பவருக்கு
            அனுக்ரகத்தைக் காண்பித்து,
            துக்கப்பட்டோர் எல்லாரையும்
            அன்பாகத் தேற்றி அருளும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே