15 September 2018

நல் மேய்ப்பரே இக் கூட்டத்தை

4. Shropshire; Alstone, Tallis.                 L.M.

Invocation

1.       நல் மேய்ப்பரே, இக் கூட்டத்தை
            கண்ணோக்கி ஆசீர்வதியும்;
            தாசர் செய்யும் ஆராதனை
            அன்பாக அங்கீகரியும்.

2.         உம் சித்தத்துக்கு ஏற்றதாய்
            ஜெபிக்கக் கட்டளையிடும்;
            தேவன்பைக் காட்டி, பக்தியாய்
            துதிக்க ஏவியருளும்.

3.         இவ் வாலயத்தில் பணிவாய்
            ஆராதிப்போர் அனைவரும்
            உண்மையும், தூய்மை அன்புமாய்
            தொழுதுகொள்ள எழுப்பும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...