18 September 2018

வெளியில் ஊரில் யாவும்

25. Innsbruck Hebron:  Bread of Life                       7, 7, 6, 7, 7, 8

"Nun ruhen alle Walder"

1.       வெளியில் ஊரில் யாவும்
            எல்லா ஜீவாத்துமாவும்
                        இப்போதமைந்தது;
            என் மனதே, நீ பாடி,
            உன் கர்த்தரைக் கொண்டாடி,
                        ஜெபத்தியானமாய் இரு.

2.         பகலோன் அஸ்தமித்து,
            ரா வந்ததால் ஒளித்து
                        காணாமல் போயிற்று;
            ஆனாலும் யேசுவான
            பகலோன் என்னும் ஞான
                        வெளிச்சமே என் பூரிப்பு.

3.         இந்நாளின் வேலையாலும்
            தலையும் கையும் காலும்
                        சலித்துப் போயிற்று;
            ஆனால் இனி எப்பாடும்
            எப்பாவக்கேடும் மாறும்,
                        என் மனதே, மகிழ்ந்திரு.

4.         என் சுற்றத்தார்கள் மீதும்
            இராவில் கேடும் தீதும்
                        வாராமல், யாவரும்
            அருள் நிழலின் கீழே
            சுகித்துத் தூங்க நீரே
                        அன்பாகக் கட்டளையிடும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...