வியாதியஸ்தர் மாலையில்


24. Angelus                                                                           L.M.

"At even ere the sun was set"

1.         வியாதியஸ்தர் மாலையில்
            அவஸ்தையோடு வந்தாரே;
            தயாபரா, உம்மண்டையில்
            சர்வாங்க சொஸ்தம் பெற்றாரே.

2.         அவ்வாறிப்போதம் ஆவலாய்
            பாதாரவிந்தம் அண்டினோம்;
            ப்ரசன்னமாகித் தயவாய்க்
            கண்ணோக்குவீர் என்றறிவோம்.

3.         வியாதி சஞ்சலத்தினால்
            அநேகர் க்லேசமுற்றனர்;
            மெய்ப்பக்தி அன்பின் குறைவால்
            அநேகர் சோர்வடைந்தனர்.

4.         ப்ரபஞ்சம் வீண் என்றறிந்தும்;
            பற்றாசை பலர் கொண்டாரே;
            உற்றாரால் பலர் நொந்தாலும்,
            மெய்நேசர் உம்மைத் தேடாரே.

5.         மாசற்ற தூய தன்மையை
            பூரணமாய்ப் பெறாமையால்,
            எல்லோரும் சால துக்கத்தை
            அடைந்தோம் பாவப் பாசத்தால்.

6.         ஆ, க்றிஸ்துவே, மன்னுருவாய்
            மா துன்பம் நீரும் அடைந்தீர்;
            எப்பாடும் பாவமும் அன்பாய்
            ஆராய்ந்து பார்த்து அறிவீர்.

7.         உம் வார்த்தை இன்றும் பலிக்கும்
            நீர் தொட்டால் சொஸ்தம் ஆவோமே;
            ஆரோக்கியம் எல்லாருக்கும்
            இம் மாலை தாரும், இயேசுவே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு