யேசுவே திருச்சபை ஆலயத்தின்


யேசுவே திருச்சபை ஆலயத்தின் மூலைக்கல்

315. (314) யமுனாகல்யாணி                             ரூபகதாளம்

பல்லவி

                   யேசுவே திருச்சபை ஆலயத்தின்
                   என்றும் நிலைக்கும் மூலைக்கல்.

அனுபல்லவி
                        பேசற் கரிய மூலைக்ககல் அவர்
                        பெரும் மாளிகையைத் தாங்கும் கல். - யேசுவே

சரணங்கள்

1.         ஆகாதிதென்று வீடு கட்டுவோர்
            அவமதித்திட்ட இந்த கல்;
            வாகாய் ஆலய மூலைக் கமைந்து
            வடிவாய்த் தலைக்கல்லான கல். - யேசுவே

2.         ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும்
            அதிசயமான அன்பின் கல்;
            ஞாலத்துப்[1] பல ஜாதிகள் தமை
            நட்புற[2] ஒன்றாய்ச் சேர்க்கும் கல். - யேசுவே

3.         ஒப்பில்லா அரும் மாட்சிமை யுறும்
            உன்னத விலைபெற்ற கல்;
            எப்போதும் பரஞ்சோதியாய் நீதி
            இலங்கும்[3] சூரியனான கல். - யேசுவே

4.         காற்றுக்கும் கன மழைக்கும் அசையா
            கடிய மாபலமான கல்;
            மாற்றிக் கலியை ஆற்றுத் துயரைத்
            தேற்றி சபையைக் காக்குங் கல். - யேசுவே

5.         என்றும் கட்டுவோம் இந்த ஆலயத்தை,
            எழிலுறவே[4] இக் கல்லின்மேல்;
            நன்றாய் இக்கல்லில் நம்பிக்கை வைப்போன்
            நாணம் அடையாள மெய்தானே. - யேசுவே

- வே. சந்தியாகு


[1] பூமியின்
[2] சினேகமுண்டாக
[3] ஒளிவீசும்
[4] அழகாய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு