வாரும் எமது வறுமை நீக்க வாரும்
வாரும் எமது வறுமை நீக்க
367.
(328) மணிரங்கு ரூபக
தாளம்
பல்லவி
வாரும், எமது வறுமை நீக்க வாரும்,
தேவனே;
மழை
தாரும், ஜீவனே.
சரணங்கள்
1. பாரில்[1]
மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே; வெகு
கேடும்
நீண்டதே. - வாரும்
2. நட்ட
பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே் மிகக்
கஷ்டம்
ஆச்சுதே. - வாரும்
3. பச்சை
மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே; அன்னம்
பாறல்[2]
ஆச்சுதே. - வாரும்
4. தரணி
யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா; நரர்
தயங்கிறோம்
மெய்யாய். - வாரும்
5. கருணையுள்ள
நாதனே, இத் தருணம் வாருமே; எங்கள்
தயங்கல்
தீருமே. - வாரும்
- ச. யோசேப்பு
Comments
Post a Comment