இயேசு என் மீட்பர் சண்டாளருக்காய்


42.     "Jesus my Saviour, to Bethlehem came"   (40)

1.         யேசு என் மீட்பர் சண்டாளருக்காய்
            பூமியில் பிறந்தார் பாலகனாய்
            நீசமா பாவியைக் கருணையாய்
            தேடிவந்தார், வந்தார்.

பல்லவி

                        தேடிவந்தார், வந்தார்.
                        தேடிவந்தார், வந்தார்.
                        நீசமா பாவியைக் கருணையாய்
                        தேடிவந்தார், வந்தார்.

2.         பாவ மா கடனைத் தீர்த்துப்போட்டார்,
            தீவினை நீக்கவும் பாடுபட்டார்.
            யேசுவைப்போல், வல்ல ரக்ஷகர் யார்?
            உயிர் தந்தார், தந்தார்.

பல்லவி

                        யேசுவைப்போல் வல்ல ரக்ஷகர் யார்?
                        உயிர் தந்தார், தந்தார்.

3.         சிறியேன் பாவத்தின் மாய்கையினால்,
            புத்தியில்லாமலும் அலையுங்கால்,
            நீசனை நினைத்து நேசித்ததால்
            ரட்சை செய்தார், செய்தார்.

பல்லவி

                        நீசனை நினைத்து நேசித்ததால்
                        ரட்சை செய்தார், செய்தார்.

4.         யேசு என் மீட்பர் வந்தருளுவார்.
            வானத்தினின்றவர் இறங்குவார்.
            மாட்சிமையோடென்னைச்சேர்த்துக் கொள்வார்!
            வாழச்செய்வார், செய்வார்.

பல்லவி

                        மாட்சிமையோடென்னைச்சேர்த்துக்கொள்வார்!
                        வாழச்செய்வார், செய்வார்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு