நித்தம் அருள்செய் தயாளனே
நித்தம் அருள்செய்
362. செஞ்சுருட்டி ஆதி
தாளம்
பல்லவி
நித்தம்
அருள்செய் தயாளனே!-எங்கள்
நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி - நித்தம்.
அனுபல்லவி
உத்தம சற்குண தேவ குமாரா!-
உம்பர்கள்[1] சந்ததம்
போற்றும் சிங்காரா!
சத்திய வேதவி னோதலங்காரா!-
சதிசெய்யும் பேய் தலை சிதைத்த
சிங்காரா! - நித்தம்
சரணங்கள்
1. பட்சப் பரம குமாரனே, எங்கள் பாவந்தீரும்
மாவீரனே
ஸ்வாமி!
அட்சய[2] சவுந்தர
ஆத்துமநாதா, அடியவர் துதிசெய்யும்
ஆரணபோதா,
ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா, ராசகெம்பீர,
சங்கீத
பொற்பாதா. - நித்தம்
2. சென்றாண்டெமை முகம் பார்த்தவா, ஒரு சேதம்
விக்கின[3]
மறக் காத்தவா,-ஸ்வாமி!
இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம், ஏக
சந்தோஷ
மாய்ச் சந்தித்துக் கொண்டோம்.
குன்றா[4] உமதுநல்
லாவியை ஈந்து கூடவே இருந்தடியார்
ஜெபங்கேட்டு.
- நித்தம்
-
ஆ.ஜா. பிச்சைமுத்து
Comments
Post a Comment