சத்ய வேதமான விதை காலை மாலை
23. 'Sowing in the morning sowing seeds of
kindness' (757)
1. சத்ய வேதமான விதை காலை மாலை
விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே,
அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே;
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே,
பல்லவி
அரிக்கட்டோ டே
அரிக்கட்டோ டே
சேருவோம் எல்லோரும்
அரிக்கட்டோடே.
2. மழையடித்தாலும், வெயிலெரித்தாலும்,
குளிர்ச்சியானாலும், வேலை செய்வோமே,
நல்ல பலன் காண்போம் துன்பம் மாறிப்போகும்,
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே,
அரிக்கட்டோடே, மி.
3. கவலை, விசாரம்; கஷ்ட நஷ்டத்தோடு
விதைத்தாலும் வேலை விடமாட்டோமே,
இளைப்பாறக் கர்த்தர் நம்மை வாழ்த்திச்
சேர்ப்பார்
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
அரிக்கட்டோடே, மி.
Comments
Post a Comment