ஐயரே நீர் தங்கும் என்னிடம்


ஐயரே நீர் தங்கும்
 337. சங்கராபரணம்                                         ஆதி தாளம்

1.         ஐயரே, நீர் தங்கும் என்னிடம்,
            ஐயரே, நீர் தங்கும்!-இப்போது
            அந்திநேரம் பொழு தஸ்தமித்தாச்சே,
            ஐயா, நீர் இரங்கும்.

2.         பகல்முழுவதும் காத்தீர், சென்ற
            பகல் முழுவதும் காத்தீர்;-தோத்திரம்!
            பரமனே, இந்த இரவிலும் வாரும்,
            பாவியை நீர் காரும்!

3.         தங்கா தொருபொருளும் என்னிடம்,
            தங்கா தொருபொருளும்;-யேசு
            தற்பரனே, நீர் ஒருவரே யென்னில்
            தங்கித் தயைபுரியும்.

4.         உயிரே துமையன்றிப் பாவிக்
            குயிரே துமையன்றி?-என்றன்
            உடல் உயிர் உம்மால் உய்கிறதையா,
            உத்தமனே, தங்கும்.

5.         நீர் தங்கிடும் வீட்டில், யேசுவே,
            நீர் தங்கிடும் வீட்டில்,-எல்லாம்
            நிறைவே குறைவுண்டாமோ, கர்த்தா?
            நின்னை விடமாட்டேன்.

6.         என்பாவம் மனியும், இறையே,
            என்பாவம் மனியும்;-அப்போ
            எளியேன் உம்மோ டயர்வேன், இரவில்
            எனக்கோர் திகிலேது?

7.         எனக்கு நீர்காவல், என்றும்
            எனக்கு நீர்காவல்;- என்றன்
            இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர்
            எல்லாவர்க்குங் காவல்.

8.         உம்மோடே படுப்பேன், ஐயா,
            உம்மோடே படுப்பேன்;-இரவில்
            உம்மோ டயர்வேன், சேதமில்லாமல்
            உம்மோ டெழுந்திருப்பேன்.

­- ஞா. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு