அனாதி நித்திய நேசர்
51. “O word
of words the sweetest.” (425)
1. அனாதி நித்திய
நேசர்
அன்போடு நிற்கிறார்;
மா பரிதாபங்காட்டி
வாக்கருளுகின்றார்.
'எப்பாவப் பாரமேனும்
இப்போது நீக்குவேன்.
நான் இளைப்பாறல் தந்து,
சந்தோஷமாக்குவேன்.
பல்லவி
'வாரும்!
வாரும்! என்னிடம்
வாரும்! வாரும் என்னிடம்
பாரஞ் சுமந்தோரே!
வாரும் வாருமேன்!
வாரும்! வாரும்! என்னிடம்
வாரும்! வாரும்! என்னிடம்
பாரஞ் சுமந்தோரே!
வாரும் வாருமேன்.
2. நல் நேசர் அருள் வாக்கை.
நம்பாமல் போவானேன்!
மெய் இளைப்பாறலின்றி
வீணாகச் சோர்வதேன்?
பொய் உரையாத தேவன்
இவ்வாறு நிற்கையில்
அஞ்சாமல் வந்து சேரும்,
பாதார விந்தத்தில்.
3. அபாத்திர ரானாலும்
தள்ளாமல் சேர்க்கிறார்.
பொல்லார் தீயோர், எல்லோரும்
வந்தாலும் ரட்சிப்பார்.
ஓ, தாமதஞ் செய்யாமல்,
இந்நல்ல நேரத்தில்
மெய்வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்
மா நேசரிடத்தில்.
Comments
Post a Comment