இமால்ய மலை யேறி


50.     "From Greenlan's icy mountains".  (1070)         

1.         இமால்ய மலை யேறி
            தேசாந்தம் நோக்குமேன்!
            வங்காளக் கடல் தாண்டி,
            மேற்றிசை வாருமேன்!
            இத்தேசத்தா ரெல்லாரும்
            அஞ்ஞான பாசத்தால்
            கட்டுண்டுபோனார், பாரும்!
            மெய்யறிவின்மையால்,

2.         மா கங்கா, சிந்து தீரம்,
            காவேரிப் போக்குகள்
            ராமேஸ்வரம், குற்றாலம்,
            கண்கொள்ளும் காட்சிகள்
            ஆனாலங்குள்ள யாரும்
            வீண் பக்திக்காரரே!
            அவர்கள் ஸ்திதி முற்றும்
            நிர்பந்தமானதே.

3.         இச்செல்வ தேசம் எங்கும்
            மா செழிப்பாயினும்,
            நற் புஷ்பச் செடி யாவும்
            சுகந்தம் வீசினும்
            ஐயோ! தீயோரின் நெஞ்சு
            துர்க்கந்த முற்றதால்
            பாதாளத் தீயில் வீழ்ந்து
            மாழ்வாரே பாவத்தால்.

4.         நாஸ்திகம், லோக ஞானம்
            வீண்பக்தி, பூஜையும்;
            புராண விசுவாசம்,
            இஸ்லாம், வேதாந்தமும்
            நிர்மூலமாக்கி நல்ல
            ப்ரகாசம் காட்டுவீர்,
            கர்த்தாவே! நீரே வல்ல
            மெய்வேதம் ஸ்தாபிப்பீர்.

5.         ஐரோப்பா ஆசியாவும்
            ஆப்ரிக்கா கண்டமும்,
            எத்திசை தேசம் யாவும்
            பூலோகம் அனைத்தும்
            இம்மானுவேலைச்சேரும்
            சுதந்த்ர சொந்தமாய்
            மெய்மார்க்கம் வளர்ந்தோங்கும்
            மகா ப்ரபல்யமாய்.

6.         யேசுவினாலுண்டான
            நற்செய்தி கூறுவோம்!
            பேரன்பின் மகத்தான
            மெய்ச்சுடர் காட்டுவோம்.
            பூலோகமெங்குமாக
            பேரொளி வீசவே,
            நல் மீட்பர் ராஜாவாக
            வந்தரசாள்வாரே.



Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு