அந்தகாரப் பூமிஇதையா இருளோ
அவிரொளி உதித்ததையா
376. (79L) ஆனந்த பைரவி ரூபக
தாளம்
பல்லவி
அந்தகாரப் பூமிஇதையா,-இருளோ டிமெய்
அவிரொளி உதித்ததையா,
அனுபல்லவி
சிந்தை இருள்மூடிக் கெட்டுச்
சந்ததமும் உன்னைவிட்டு,
நிந்தைகள் இலச்சைப்பட்டு,
நேசமுற்று மோசம் போன. - அந்த
சரணங்கள்
1. தேசங்கள் கடல்களெங்கும்-உந்தன்வேத
சேதியின் பலன்கள் தங்கும்,
காசினியோர்கட்குப் பொங்கும்-அளவில்லாத
களிப்புகளுண்டாயிலங்கும்,
என்றமொழி யிந்தக்காலம்
உண்மையாச்சு துந்தன்சீலம்
ஏழைகளுக் கனுகூலம்
இன்றுவந்த துமக்கோலம். - அந்த
2. கஷ்டநஷ்டங் கொண்டுவாடிக்-கணக்கில்லாத
கவலைக ளாலுமூடிக்
கர்த்தனே, உனைமன்றாடிக்-கண்ணீராறாய்க்
கதறியச் செபித்துத் தேடிச்
சத்திய சுவிசேட
வித்தினை யிங்குபோட,
வந்தவர்க் கன்பைநாட
வந்தனம் ஐயா காவும். - அந்த
-
ம.ப. அருளப்பன்
Comments
Post a Comment