ஓய்வுநாள் இது மனமே தேவனின்
ஓய்வுநாள் இது மனமே
340. (23) மோகனகல்யாணி சாபுதாளம்
பல்லவி
ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின்
உரையைத் தியா னஞ் செய் கவனமே.
அனுபல்லவி
நேய
தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே. - ஓய்வு
சரணங்கள்
1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே;
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக்கொள், இது சமயமே. - ஓய்வு
2. ஆறு நாளுனக் களித்தவர், இளைப்
பாறி எழினில் களித்தவர்;
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துணை இதற் கழைக்கிறார். - ஓய்வு
3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்;
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம். - ஓய்வு
Comments
Post a Comment