மெய்யாம் வாசஸ்தலமுண்டே
8. "Oh! think of the home over there!' (942)
1. மெய்யாம்
வாசஸ்தலமுண்டே
ஜீவநதியின் ஓரத்திலாம்.
மோக்ஷ வாசிகளானவரே
பரிசுத்த சம்பூரணராம்.
பல்லவி
அங்குதான் - அங்குதான்
மெய்யாம் வாசஸ்தலமுண்டே.
2. என் பிரிய சிநேகிதரும்
அந்த ஸ்தலத்தில் சென்றிருப்பார்
பரஞ்சோதி சமூகத்திலும்
சுகவாழ்வையும் பெற்றிருப்பார்.
3. என் அருமை ரக்ஷகரும்
பரலோகத்தின் சூரியனாம்,
அந்த வீட்டில் சேர்ந்திடவும்
நீங்கிப்போகும் விசாரமெல்லாம்.
4. சேர்வேன் அதிசீக்கிரமே
மோக்ஷலோகத்தில் ஆனந்திப்பேன்
ஜீவநதியின் ஓரத்திலே
என் மீட்பரை ஸ்தோத்தரிப்பேன்.
Comments
Post a Comment