மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு


மங்கள ஜெய மங்களம்

379. (377) சௌராஷ்டிரம்                               சாபு தாளம் 
பல்லவி

            மங்களம்! ஜெயமங்களம்! மகத்துவற்கு
            மங்களம்! ஜெயமங்களம்!

சரணங்கள்

1.         எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்
            பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும். - மங்களம்

2.         நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்
            தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும் - மங்களம்

3.         சுத்தரித்து நரர் சுக உலகம் அடையப்
            பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும். - மங்களம்

4.         இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்
            செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு. - மங்களம்

- யோ. பால்மர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்