18 September 2018

எல்லாம் படைத்த நமது


30. Cleophas: Redhead 4      Old Hundredth         L.M.

"Helleluja, Lob, Preis und Ehr"

1.         எல்லாம் படைத்த நமது
            தயாபர பிதாவுக்கு
            படைப்பின் செய்கைக்காகவே,
            புகழ் செலுத்தும், மாந்தரே.

2.         உலகத்தார்க்கு மீட்பரும்
            கர்த்தாவுமாம் சுதனுக்கும்
                        ரட்சிப்பின் செய்கைக்காகவே,
            புகழ் செலுத்தும், மாந்தரே.

3.         சுதனிடத்தில் நெஞ்சத்தை
            அன்பாய்த் திருப்பி நம்பிக்கை
            உண்டாகச் செய்யும் ஆவிக்கே
            புகழ் செலுத்தும், மாந்தரே.

4.         படைப்பு மீட்பு சுத்தத்தை
            நடத்தும் மா த்ரியேகரை
            சிருஷ்டி யாவும் அன்போடு
            புகழ்ந்து போற்றத் தக்கது.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...