13 September 2018

பூலோகத்தாரே யாவரும்


ஞானப் பாட்டுகள்:1

1. Old Hundredth                        L.M.
"All People that on earth do dwell"

1.        பூலோகத்தாரே, யாவரும்
            கர்த்தாவில் களிகூருங்கள்;
            ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
            செலுத்திப், பாட வாருங்கள்.

2.         யெகோவா தாம் மெய்த்தேவனே
            நாம் அல்ல அவர் சிருஷ்டித்தார்;
            நாம் ஜனம், அவர் ராஜனே
            நாம் மந்தை, அவர் மேய்ப்பனானார்

3.         கெம்பீரித்தவர் ஆலய
            ப்ரகாரத் துள்ளே வாருங்கள்;
            மகிழ்ந்து அவர் திவ்விய
            நல் நாமத்தைக் கொண்டாடுங்கள்.

4.         கர்த்தர் தயாளர், இரக்கம்
            அவர்க்கு என்றும் உள்ளதே;
            அவர் அநாதி சத்தியம்
            மாறாமல் என்றும் நிற்குமே.

5.         விண் மண்ணில் ஆட்சி செய்கிற
            திரியேக தெய்வமாகிய
            பிதா, குமாரன், ஆவிக்கும்
            சதா ஸ்துதி உண்டாகவும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...