ஜெபத்தின் ஆவலை


138. St. George, Braden, Gorton            S.M.

"Help us to pray"

1.         ஜெபத்தின் ஆவலை
                        என் நெஞ்சில் அருளும்;
            தேவாவி, லோக நேசத்தை
                        என்னை விட்டகற்றும்.

2.         பூலோக சிந்தையை
                        வெறுத்துத் தள்ளுவேன்
            மேலான நித்ய இன்பத்தை
                        நான் தேட ஏவுமேன்.

3.         எனக்குத் துணையாய்
                        என் பக்கத்தில் இரும்;
            நான் நிலை நிற்கும்படியாய்
                        கிருபை அளியும்.

4.         தேவன்பின் பாசத்தால்
                        கட்டுண்டு என்றைக்கும்
            உம்மை என் முழு மனதால்
                        பின்பற்றச் செய்திடும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே