எல்லாருக்கும் மா உன்ன


97. Miles Lane                                                                   C.M.

"All Hail the power of Jesus's name"

1.         எல்லாருக்கும் மா உன்ன
                        கர்த்தாதி கர்த்தரே;
            மெய்யான தெய்வ மனிதர்,
                        நீர் வாழ்க, யேசுவே!

2.         விண்ணில் ப்ரதானியான நீர்
                        பகைஞர்க்காகவே
            மண்ணில் இறங்கி மரித்தீர்;
                        நீர் வாழ்க, யேசுவே!

3.         பிசாசு, பாவம், உலகம்,
                        இச்சத்துருக்களே
            அழிந்துபோக மிதியும்;
                        நீர் வாழ்க, இயேசுவே!

4.         நீர் வென்றபடி நாங்களும்
                        வென்றேறிப் போகவே!
            பரத்தில் செங்கோல் செலுத்தும்
                        நீர் வாழ்க, யேசுவே!

5.         விண்ணோர்களோடு மண்ணுளோர்
                        என்றைக்கும் வாழ்கவே,
            பரம வாசல் திறந்தோர்
                        நீர் வாழ்க, யேசுவே!

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே