சிறையுற்றோரின் மீட்பரே
115. Faith, French (Dundee) C.M.
"Author
of Selvation"
1. சிறையுற்றோரின்
மீட்பரே,
என் யேசுவே, நீர் தாம்
தயையால் என்னைத் தேற்றவே
மகா இரக்கமாம்.
2. ஆன்மாவைத் தாங்க வல்லவர்,
உதார வள்ளல் நீர்
ரட்சிப்புக் காதிகாரணர்;
பொல்லாங்கை நீக்குவீர்.
3. நான் சொந்த நீதி அற்றவன்;
என் நீதி கந்தைதான்;
உம்மால் நான் நீதியுள்ளவன்,
மிகுந்த பாக்யவான்.
4. சிறந்த இந்த நன்றியை
நான் என்றும் மறவேன்;
என் மீட்பர் என்ற நாமத்தை
எந்நாளும் போற்றுவேன்.
Comments
Post a Comment