நாங்கள் பாவப் பாரத்தால்


164. Aberystwyth, Refuge                            7s, 8l.

"Saviour, when in dust to Thee"

1.         நாங்கள் பாவப் பாரத்தால்
            கஸ்திப்பட்டுச் சோருங்கால்
            தாழ்மையாக உம்மையே
            நோக்கி, கண்ணீருடனே
            ஊக்கத்தோடு வாஞ்சையாய்
            கெஞ்சும் போது தயவாய்
            சிந்தை வைத்து யேசுவே,
            எங்கள் வேண்டல் கேளுமே.

2.         மாந்தனாய்ப் நீர் பிறந்ததும்,
            ஏழையாய் வளர்ந்ததும்,
            பசிதாகம் கொண்டதும்
            சாத்தானை நீர் வென்றதும்
            மோக்ஷம் விட்ட விந்தையும்
            லோகம் மீட்ட நேசமும்
            நீர் நினைத்து யேசுவே,
            எங்கள் வேண்டல் கேளுமே.

3.         காவில் பட்ட கஸ்தியும்
            ரத்தஞ் சொரி வேர்வையும்
            முட் க்ரீடம், நிந்தனை,
            ஆணி, ஈட்டி, வேதனை
            உம்தன் ஐந்து காயமும்,
            சாவின் நோவும், வாதையும்
            நீர் நினைத்து, யேசுவே,
            எங்கள் வேண்டல் கேளுமே.

5.         ப்ரேதச் சேமம், கல்லறை
            காத்த காவல், முத்திரை,
            சாவை வென்ற சத்துவம்,
            பரமேறும் அற்புதம்,
            நம்பினோர்க்கு ரட்சிப்பை
            ஈயும் அன்பின் வல்லமை
            சிந்தை வைத்து, யேசுவே,
            எங்கள் வேண்டல் கேளுமே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு