சிலுவை மரத்திலே


157. Ratisbon                          7s, 6l.

"From the Cross uplifted high"

1.         சிலுவை மரத்திலே
            யேசுவை நான் நோக்கவே
            என்னைப் பார்த்தழைக்கிறார்;
            காயங்காட்டிச் சொல்கின்றார்;
            “மீட்பின் செய்கை ஆயிற்றே,
            வாழ வாவேன், பாவியே!”

2.         "பாவப் பலியானதால்
            குத்தப்பட்டேன் ஈட்டியால்;
            ரத்தம் பூசப்பட்டு நீ
            எனக்குன்னை ஒப்புவி;
            மீட்பின் செய்கை ஆயிற்றே
            வாழ வாவேன், பாவியே."

3.         "பான போஜனம் நானே,
            விருந்துண்டு வாழ்வாயே;
            பிதாவண்டை சேரலாம்,
            நேசபிள்ளை ஆகலாம்;
            மீட்பின் செய்கை ஆயிற்றே,
            வாழ வாவேன், பாவியே.”

4.         "சீக்கிரத்தில் வருவேன்,
            உன்னைச் சேர்ந்து வாழ்விப்பேன்,
            நித்யானந்தம் மோட்சத்தில்
            உண்டு, வா என்னண்டையில்,
            மீட்பின் செய்கை ஆயிற்றே,
            வாழ வாவேன், பாவியே."

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு